Friday, May 16, 2025

Kanakkadhiharam by (author: korukkaiyoor karinayanar)

 Kanakkadhiharam 
(author: korukkaiyoor kaarinayanar) 

கணக்கதிகாரம் 

எழுதியவர் கொருக்கையூர் காரி நாயனார்

 காரி நாயனார் என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

இந்நூலில் ஆறு பிரிவுகளில் 64 வெண்பாக்களும், 45 புதிர் கணக்குகளும் உள்ளன: நிலம் வழி (23 பாக்கள்), பொன் வழி (20 பாக்கள்), நெல் வழி (06 பாக்கள்), அரிசி வழி (02 பாக்கள்), கால் வழி (03 பாக்கள்), கல் வழி (01 பாக்கள்), பொது வழி (05 பாக்கள்) என்ற ஆறுவழிக் கணக்குகளையும் புலவர் அறுபது செய்யுள்களால் உணர்த்தினார் என்பதை:

“ஆதிநிலம் பொன்னெல் லாரிசி யகலிடத்து
நீதிதருங் கால் கல்லே நேரிழையாய் – ஓதி
உறுவதுவாகச் சமைத்தேன் ஒன்றெழியா வண்ணம்
அறுபது காதைக்கே யடைத்து.”

ஆறு வழிக் கணக்கு மட்டுமல்லாது வேறு பல கணக்குகளையும் இந்நூலில் நீங்கள் பார்க்கலாம். இக்கணக்குகள் கற்பவர்க்கு திகைப்பும், வியப்பும், நகைப்பும், நயப்பும் விளைவிக்கும் என்பது திண்ணம்.

தமிழ் எண்கள்: 1. தமிழ் முழு எண்களின் பெயர்கள்; 2. தமிழ் பின்ன எண்களின் பெயர்கள்;

பொழுதுபோக்கு: 3. “மாயசதுர’ கணக்குகள்” – எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை; 4. வினா-விடைக் கணக்குகள்;

புதிர் கணக்குகள்: 5. பூமியின் அளவு, நிலத்தின் அளவு, நீர் அளவு, சூரியன்-சந்திரன் இடையேயான தொலைவு, மலையின் அளவு;

சூத்திரக் கணக்குகள்: 6. ஒரு படி நெல்லில் எத்தனை நெல் இருக்கும்;  ஒரு பலாப்பழத்தில்  எத்தனை பலாச்சுளை இருக்கும்; ஒரு பரங்கிக்காயில்  எத்தனை விதைகள் இருக்கும்.

கணக்கதிகாரத்தில், வெண்கலம் மற்றும் பித்தளை ஒன்றாகச் சேர்த்து உருக்கி பித்தளை உருவாக்கும் விவரம் பற்றிய ஒரு செய்யுள் காணப்படுகிறது.

கணக்கதிகாரம் செய்யுள் எண்: கக (11)

“எட்டெடை செம்பி லிரெண்டை யீயமிடில்
திட்டமாய் வெண்கலமாஞ் சேர்ந்துருக்கி – லிட்டமுடன்
ஓரேழு செம்பி லொருமூன் றுதுத்தமிடில்
பாரறியப் பித்தளையாம் யார்”


உரை:

எட்டுப்பலஞ் செம்பிலே இரண்டு பலம் ஈயமிட்டுருக்க வெண்கலமாம். ஏழலரைப் பலஞ் செம்பிலே மூன்று பலந் துத்தமிட்டுருக்க பித்தளையாம்.

Two strengths of the eighty -eight copper are the bronze. The seven -year -old is the three -legged brass.

Note: Palam - Antique Tamil Weight (40.8 g).

குறிப்பு: பலம் – பழந்தமிழர் எடை அளவு (40.8 கிராம்).


A garden- lizard climbs up a palm tree of height 32 Cubits. 
It goes up 12 finger Space a day but slips 4 finger space in every move.
How many days will it take to reach the top of the tree?
I cubit = 24 finger Space.







Solution:
32 x 24 finger space = 768
Per day 12 - 4 = 8
Number of days = 768 / 8 = 96 days



A Frog had fallen into lom a well of depth Every time it tried to climb up, it climbed a distance of to cm. and slipped 20 cm. How many times should it try to Come out of that well?


The frog leaped forward to catch the insect away in Em. But It Could cover only 4 m. At second Jump half of the distance am. Third jump half of 2m. If the frog Jumps halb by hally, how many Jumps does the frog require to Catch the insect?


No comments:

Post a Comment

Math Quiz Game

🎯 7-Day Math Challenge What is 50 ÷ (5 × 2)? 5 2 10 20