Class 10 - பத்தாம் வகுப்பு- தமிழ்
அன்னை மொழியே
அன்னை மொழியே - எழுதியவர் _________
விடை:- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அன்னை மொழியே - இடம் பெறும் நூல் _______
விடை:- கனிச்சாறு
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து
இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம்
யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன.
______________ இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் பெருஞ்சித்திரனார்.
விடை:- தென்மொழி, தமிழ்ச்சிட்டு
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ____
விடை:- துரை மாணிக்கம்
பெருஞ்சித்திரனார் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி,
பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார்.
இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் எனக் கூறியவர் _______
விடை:- க. சச்சிதானந்தன்
1.“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை”
இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.
விடை:
1. நற்றிணை = நல் + திணை
தொகை நூல்களுள் முதல் நூல். நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்.
2. குறுந்தொகை:
நல்ல குறுந்தொகை எனவும் அழைக்கப்படும். குறைந்த அடியளவால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆதலால் குறுந்தொகை என அழைக்கப்பட்டது.
3. ஐங்குறுநூறு:
ஐந்திணைகளைப் பாடும் நூல். குறுகிய பாடலடிகள் கொண்ட நூல்.
4. பதிற்றுப்பத்து:
சேர அரசர்கள் பத்துப் பேரை 10 புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடியது பதிற்றுப்பத்து.
5. பரிபாடல்:
இது அகம், புறம் சார்ந்த நூல். தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.
வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களாலும், பலவகையான அடிகளாலும் பாடப்பட்டுள்ளது.
6. கலித்தொகை:
ஐந்திணையும் ஐவரால் கலிப்பாவில் அமைந்த நூல்.
கலிப்பாவின் ஓசை துள்ளல் ஓசை.
‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ எனவும் கூறப்படுகிறது.
7. அகநானூறு :
அகம் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது.
களிற்றியானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளைக் கொண்டது.
8. புறநானூறு:
புறம் சார்ந்த நூல். 400 பாடல்களை உடையது. தமிழரின் வரலாற்றுப்பெட்டகம். இது பழந்தமிழரின்
வீரம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம், கொடை ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறது.
2.“எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்துநிமிட உரை நிகழ்த்துக.
“தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்” ___________ என்னும் மொழி நூலறிஞர் தமிழ்மொழியைச் சிறப்பித்துள்ளார்.
விடை:- மாக்சு முல்லர்
தமிழ்ச்சொல் வளம்
தமிழ்ச்சொல் வளம் - எழுதியவர் _________
விடை:- தேவநேயப் பாவாணர்
'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' எனக் கூறியவர் ____________
விடை:- மகாகவி பாரதியார்.
தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள"
எனக் கூறியவர் ____________
விடை:-கால்டுவெல்
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் எழுதியவர் _____
விடை:- கால்டுவெல்
அடி வகை
தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு : கீரை,வாழை முதலியவற்றின் அடி
கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
தட்டு அ ல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி : கரும்பின் அடி
கழை : மூங்கிலின் அடி
அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி.
கிளைப் பிரிவுகள்
கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
🠟 ↓
கொம்பு அல்லது கொப்பு: கவையின் பிரிவு
🠟 ↓
கிளை: கொம்பின் பிரிவு
🠟 ↓
சினை: கிளையின் பிரிவு
🠟 ↓
போத்து: சினையின் பிரிவு
🠟↓
குச்சு: போத்தின் பிரிவு
🠟↓
இணுக்கு: குச்சியின் பிரிவு.
காய்ந்த அடியும் கிளையும்
சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி)
விறகு: காய்ந்த சிறுகிளை
வெங்கழி: காய்ந்த கழி
கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.
இலை வகை
இலை: புளி, வேம்பு முதலியவற்றின் இலை
தாள்: நெல்,புல் முதலியவற்றின் இலை
தோகை : சோளம், கரும்பு முதலியவற்றின் இலை
ஓலை: தென்னை,பனை முதலியவற்றின் இலை
சண்டு: காய்ந்த தாளும் தோகையும்
சருகு: காய்ந்த இலை.
கொழுந்து வகை.
தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள்.
துளிர் அல்லது தளிர்: நெல் , புல் முதலியவற்றின் கொழுந்து
முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
குருத்து: சோளம், கரும்பு ,தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து
கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.
பூவின் நிலைகள்
அரும்பு: பூவின் தோற்ற நிலை
⬇️
போது: பூ விரியத் தொடங்கும் நிலை
⬇️
மலர்(அலர்): பூவின் மலர்ந்த நிலை
⬇️
வீ: மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை
⬇️
செம்மல்: பூ வாடின நிலை.
பிஞ்சு வகை
பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பிஞ்சு: இளம் காய்
வடு: மாம்பிஞ்சு
மூசு: பலாப்பிஞ்சு
கவ்வை: எள்பிஞ்சு
குரும்பை: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
முட்டுக் குரும்பை: சிறு குரும்பை
இளநீர்: முற்றாத தேங்காய்
நுழாய்: இளம்பாக்கு
கருக்கல்: இளநெல் கச்சல்: வாழைப்பிஞ்சு.
குலை வகை
கொத்து: அவரை, துவரை முதலியவற்றின் குலை
குலை: கொடி முந்திரி போன்றவற்றின் குலை
தாறு: வாழைக் குலை
கதிர்: கேழ்வரகு,சோளம் முதலியவற்றின் கதிர்
அலகு அல்லது குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்
சீப்பு: வாழைத் தாற்றின் பகுதி
கெட்டுப்போன காய்கனி வகை
சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்
சிவியல்: சுருங்கிய பழம்
சொத்தை: புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி
வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு
அளியல்: குளுகுளுத்த பழம்
அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்
சொண்டு: பதராய்ப் போன மிளகாய்
கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்டகாய்
தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
அல்லிக்காய் : தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்
ஒல்லிக்காய்: தென்னையில் கெட்ட காய்
பழத்தோல் வகை
தொலி: மிக மெல்லியது
தோல் : திண்ணமானது
தோடு: வன்மையானது;
ஓடு: மிக வன்மையானது
குடுக்கை: சுரையின் ஓடு
மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி
உமி: நெல்,கம்பு முதலியவற்றின் மூடி
கொம்மை: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
மணிவகை
கூலம் : நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள்
பயறு: அவரை,உளுந்து முதலியவை
கடலை: வேர்க்கடலை , கொண்டைக்கடலை முதலியவை
விதை: கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து
காழ்: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து
முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து
கொட்டை: மா, பனை முதலியவற்றின் வித்து
தேங்காய்: தென்னையின் வித்து
முதிரை: அவரை, துவரை முதலிய பயறுகள்
இளம் பயிர் வகை
நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை
கன்று: மா , புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
குருத்து: வாழையின் இளநிலை
பிள்ளை: தென்னையின் இளநிலை
குட்டி: விளாவின் இளநிலை
மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை
பைங்கூழ்: நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
எடுத்துக்காட்டாக , கோதுமையை
எடுத்துக்கொள்ளின் அதில் சம்பாக்கோதுமை,
குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய
சிலவகைகளேயுண்டு.
ஆனால், தமிழ்நாட்டு
நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல்
என்றும் சம்பா,மட்டை,கார் என்றும் பல
வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில்
மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன்
சம்பா, குண்டுச்சம்பா , குதிரைவாலிச்சம்பா,
சிறுமணிச்சம்பா , சீரகச்சம்பா முதலிய
____________ உள்வகைகள் உள்ளன.
விடை:- அறுபது
வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலியன _____
விடை :- சிறுகூலங்கள்
மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் _____
விடை:- தேவநேயப் பாவாணர்
____ என்ற நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
விடை :- "சொல்லாய்வுக் கட்டுரைகள்“
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குநராகப் பணியாற்றியவர் _____
விடை:- தேவநேயப் பாவாணர்
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்____
விடை :- தேவநேயப் பாவாணர்
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ___ (மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே- பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார்)
விடை :- மலேசியா
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் _____
விடை:- இரா.இளங்குமரனார்
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” ஒன்றை அமைத்தவர் _____
விடை:- இரா.இளங்குமரனார்
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் _____
விடை :- இரா.இளங்குமரனார்
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த் தமிழினை இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் ___
விடை :- இரா.இளங்குமரனார்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் ____
விடை :- இரா.இளங்குமரனார்
இரா.இளங்குமரனார் எழுதிய நூல்கள்
இலக்கண வரலாறு,
தமிழிசை இயக்கம்,
தனித்தமிழ் இயக்கம்,
பாவாணர் வரலாறு,
குண்டலகேசி உரை,
யாப்பருங்கலம் உரை,
புறத்திரட்டு உரை,
திருக்குறள் தமிழ் மரபுரை,
காக்கைப் பாடினிய உரை,
தேவநேயம் முதலியன.
போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில் தான் மொழி பெயர்க்கப்பட்டது.
இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது.
ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.
செய்தி- ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக்
கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க.
தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.
தரிசு நிலம் : பயிர் செய்யாத நிலம்
சிவல் நிலம் : செந்நிலம் அல்லது சிவந்த நிலம்
கரிசல் நிலம் : கரிய நிறமுடைய மண் கொண்ட நிலம் கரிசல்
நிலம் (அ) கரிந்த பாலை நிலம்
முரம்பு நிலம் : பருக்கைக் கற்கள் கொண்ட மேட்டு நிலம்
புறம்போக்கு நிலம் : ஊர்ப்புறத்தே குடிகள் வாழ்தலில்லாத நிலம்
சுவல் நிலம் : மேட்டு நிலம்
அவல் நிலம் : ‘அவல்’ என்பதன் பொருள் ‘பள்ளம்’. ஆகவே பள்ளமான நிலப்பகுதி அவல் என அழைக்கப்படுகிறது. விளை நிலமாகவும் அமைகிறது.
2. ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுக.
எ.கா. சொல்லுதல் – பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்….
அ) மலர்தல் – அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல்.
ஆ) ஞாயிறு – சூரியன், கதிரவன், வெய்யோன், பகலவன், பரிதி.
இ) அரசன் – கோ, கொற்றவன், வேந்தன், ராஜா, கோன்.
ஈ) அழகு – அணி, வடிவு, பொலிவு, எழில்.
உ) அடி- கழல், கால், தாள், பதம், பாதம்.
ஊ) தீ – அக்கினி, நெருப்பு, தழல்.
எ) அச்சம் – பயம், பீதி, உட்கு .
ஏ) துன்பம் – இன்னல், அல்லல், இடும்பை
ஐ) அன்பு – கருணை , நேசம், ஈரம், பரிவு, பற்று.
ஓ) செய்யுள் – பா, கவிதை, யாப்பு.
ஓ) பெண் – நங்கை, வனிதை, மங்கை.
ஔ) வயல் – கழனி, பழனம், செய்.
No comments:
Post a Comment